தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 14, 2026 09:07 PM

ADDED : அக் 14, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:07 PM ADDED : அக் 14, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணிற்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்தவர் கைது

விருகம்பாக்கம்: விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணும், ரூபேஷ், 25 என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதங்களும்முன் அப்பெண் பிரிந்தார். ஆனால் காதலிக்குமாறு வற்புறுத்தி, ரூபேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். செப்., 1ம் தேதி இரவு, அப்பெண்ணின் வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, ‘தன்னை காதலிக்காவில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டினார். மேலும், பெண்ணின் பெற்றோரையும் மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார், தலைமறைவாக இருந்த ரூபேஷை நேற்று கைது செய்தனர்.

ஐ.டி., பெண் ஊழியருக்கு தொல்லை

அண்ணா நகர்: அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது பெண், போரூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றியபோது, 2022ல் சதீஷ், 33, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து, அவர் பழகியதை அறிந்த அப்பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இருப்பினும், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி பெண்ணுக்கு, சதீஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற நண்பர்களுக்கு ‘காப்பு’

அரும்பாக்கம்: அரும்பாக்கம், திருமகள் தெருவில், நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் கும்பலாக நின்றிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். நண்பர்களான ஐந்து பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது; 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அமைந்தகரையைச் சேர்ந்த ஹரிஷ், 28, சூர்யா, 24, பவித்குமார், 24, லோகேஷ், 28, மனோஜ்குமார், 27, என்பது தெரியவந்தது. ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us