/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமோனியா வாயு கசிவு கலெக்டரிடம் மனு
/
அமோனியா வாயு கசிவு கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 20, 2024 01:01 AM
பிராட்வே,
எண்ணூர், பெரிய குப்பத்தில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்த டிச., 26ல், அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், சத்தியவாணி முத்துநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி 24வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மீனவர்கள் சங்கம் தலைவர் நாஞ்சில் ரவி, தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் தலைவர் ஜெ.கோசுமணி உள்ளிட்ட எட்டு மீனவர் சங்கத்தினர், சென்னை கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:எண்ணூர் கத்திவாக்கம் மாநகராட்சி பகுதி அதிக மக்கள் தொகையை கொண்டது.
12,500 எம்.டி., கொள்ளளவு கொண்ட அமோனியா சேகரிப்பு தொட்டியை கோரமண்டல் நிறுவனம் கையாளுகிறது. இது கடலில் இருந்து 44 மீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது.
தற்போதைய கால மாற்றத்தால் புயல்கள் அதிக வீரியம் கொண்டதாக உள்ளது.
எனவே, வரும் காலத்தில் அதிக வீரிய கொண்ட புயல்கள் தாக்கும் போது, எண்ணூரில் 5 கி.மீ., தூரம் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.