/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வக்பு வாரிய குளத்தில் மண் கொட்டி துார்க்க முயற்சி
/
வக்பு வாரிய குளத்தில் மண் கொட்டி துார்க்க முயற்சி
ADDED : செப் 23, 2024 03:05 AM

விருகம்பாக்கம்:விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவில், 3 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. குளமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை.
கடந்த 2021, ஏப்., மாதம், குளத்தை ஒட்டி 1,200 சதுர அடியில் பள்ளிவாசல் கட்டடம் கட்ட, வக்பு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
ஆனால், அனுமதி வழங்கிய பரப்பைவிட, நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மண் கொட்டி துார்க்கும் பணிகள் நடந்தன. இதுகுறித்தும் நம் நாளிதழில் 2022, ஆக., மாதம் செய்தி வெளியானது.
இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மண் கொட்டி குளத்தை துார்க்கும் பணி நடந்து வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் கொட்டுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
இதுகுறித்து வக்பு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‛நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் கொட்ட யாருக்கும் வாரியம் அனுமதி வழங்கவில்லை. மண் கொட்டுவோர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளோம்' என்றார்.