/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சுந்தரம் அசெட்' தலைமை நிர்வாகி ஆனந்த் ராதாகிருஷ்ணன் நியமனம்
/
'சுந்தரம் அசெட்' தலைமை நிர்வாகி ஆனந்த் ராதாகிருஷ்ணன் நியமனம்
'சுந்தரம் அசெட்' தலைமை நிர்வாகி ஆனந்த் ராதாகிருஷ்ணன் நியமனம்
'சுந்தரம் அசெட்' தலைமை நிர்வாகி ஆனந்த் ராதாகிருஷ்ணன் நியமனம்
ADDED : பிப் 15, 2024 12:53 AM
சென்னை,
சுந்தரம் அசெட் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஆனந்த் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996 முதல் 2004 வரை, இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஆனந்த் ராதாகிருஷ்ணன், பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
சுந்தரம் அசெட் நிறுவனத்தில் 19 ஆண்டுகளாக நிர்வாக இயக்குனராக இருந்து வரும் சுனில் சுப்பிரமணியம், வரும் ஜூனில் ஓய்வு பெறுகிறார்.
அதைத் தொடர்ந்து, வரும் ஜூலை முதல், தலைமை செயல் அதிகாரியாக ஆனந்த் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்க உள்ளார்.
'ஆனந்த் ராதாகிருஷ்ணனின் தலைமைத்துவ திறன், விரிவான தொழில் அனுபவம் ஆகியவை, சுந்தரம் அசெட் மேலாண்மை நிறுவனத்தை மேலும் வலுவாக்கும்' என, நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெறும் சுனில் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நிதி மேலாண்மைத் துறையில் முன்னணியில் உள்ள, சுந்தரம் அசெட் மேலாண்மை நிறுவனம், 71,000 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டது. 13 லட்சம் வாடிக்கையாளர்கள், 81 கிளைகளுடன் வலுவான நிலையில் உள்ளதாக, அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

