/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலில் தவறி விழுந்து ஆந்திர மீனவர் பலி
/
கடலில் தவறி விழுந்து ஆந்திர மீனவர் பலி
ADDED : மார் 20, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்தவர் கோவிந்து, 56; மீனவர். இவர், ஏழு மாதங்களுக்கு முன், காசிமேட்டை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி தொழில் மேற்கொண்டார்.
அதிக மதுபோதையில் இருந்த கோவிந்து, நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் கடலில் தேடியும் மீட்க முடியவில்லை. காசிமேடு கடற்கரையில் நேற்று அவரது உடல் கரை ஒதுங்கியது.
காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.

