/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் அரிசி கடத்திய ஆந்திர நபர் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய ஆந்திர நபர் கைது
ADDED : செப் 29, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எண்ணுார் போலீசார், கடந்த ஜூன் 11ம் தேதி ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, காரில் கடத்தி வரப்பட்ட 2,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
கார் ஓட்டுனர் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபளாபுரத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், முக்கிய குற்றவாளியான ஆந்திரா, நெல்லுாரைச் சேர்ந்த பிரவின்குமார் ரெட்டி, 36, என்பவரை, போலீசார் கும்மிடிப்பூண்டியில் வைத்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.