/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆன்ட்ராய்டு 14 கூகுள் டிவி' சத்யா, இம்பெக்ஸ் வெளியீடு
/
'ஆன்ட்ராய்டு 14 கூகுள் டிவி' சத்யா, இம்பெக்ஸ் வெளியீடு
'ஆன்ட்ராய்டு 14 கூகுள் டிவி' சத்யா, இம்பெக்ஸ் வெளியீடு
'ஆன்ட்ராய்டு 14 கூகுள் டிவி' சத்யா, இம்பெக்ஸ் வெளியீடு
ADDED : நவ 07, 2024 12:35 AM

சென்னை,நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்கள் பிராண்டான இம்பெக்ஸ், சென்னையில், 'கூகுள் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ்.,' வாயிலாக இயக்கப்படும், க்யூ.எல்.இ.டி., கூகுள் 'டிவி'க்களின் புதிய மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு - 14 மாடல்கள், தற்போது, யு.எச்.டி., மாடலில், 32 அங்குலம் முதல் 75 அங்குலம் வரை மற்றும் க்யூ.எல்.இ.டி., வரம்பில், 43 அங்குலம் முதல் 75 அங்குலம் அளவுகளில், 'சத்யா' ஏஜன்சியின் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
'இம்பெக்ஸ்' சந்தை பிரிவு தலைமை அதிகாரி நிதின் நம்பூதிரி பேசும்போது, ''இம்பெக்ஸ் தான் நாட்டின் முதல் மல்டிநேஷனல் கம்பெனி; மற்ற பிராண்டை விட, லைசென்ஸ் முதலில் கூகுளிடம் இருந்து கிடைத்து இருக்கிறது; சத்யா உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
சத்யா ஏஜன்சிஸ் இயக்குனர் ஜாக்சன் பேசும்போது, ''இந்த டிவி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம். சத்யா ஷோரூமை பொறுத்தவரை, தமிழகம், ஆந்திராவில் அனைத்து கிளைகளிலும் இந்த 'டிவி' கிடைக்கும்,'' என்றார்.