ADDED : பிப் 12, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில் வசிப்பவர் உதய சங்கர், 60. இவரது மனைவி, உமாராணி, 55, அதே பகுதியில் சிறிய துணிக்கடை நடை வருகிறார்.
நேற்று முன்தினம் அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள், ஜாக்கெட் துணி கேட்டுள்ளனர். பின், மர்ம நபர்கள் எடுத்த நீல வண்ண ஜாக்கெட் துணியில், ஹிந்தியில் 'ஆஷா' என எழுதிய ரசாயன பொடி ஒன்றை துாவியுள்ளனர்.
இதில், சுயநினைவை இழந்து உமாராணி, கழுத்தில் இருந்த தாலி செயின் உட்பட 6 சவரன் தங்க நகைளை கழற்றி மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். மர்ம நபர்கள் நகையுடன் தப்பி சென்றனர்.
புகாரின் படி, திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.