/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணாதுரை நினைவு நாள்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சமபந்தி விருந்து

ADDED : பிப் 04, 2024 05:30 AM

ஸ்ரீபெரும்புதுார்: அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சமபந்தி விருந்து நேற்று நடந்தது. இதையொட்டி, கோவிலி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., செல்வபெருந்ததை தலைமை தாங்கினார். இதையடுத்து, சிறப்பு வழிபாடு நிகழ்வில் கலந்து கொண்ட 100 பக்தர்களுக்கு கோவில் சார்பில் சேலைகளை வழங்கினர். பின்னர் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் செய்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் கோமதி, ஊராட்சி துணைத்தலைவர் சிவா எத்திராஜ், முன்னாள் அறங்காவலர் ஜானகிராமன், உபயதாரர் செந்தில்தேவராஜ், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.