/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹோலி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
ஹோலி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : மார் 15, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஹோலி பண்டிகையையொட்டி, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சந்திரகாச்சியில் இருந்து வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 25ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், மறுநாள் மதியம் 1:10 மணிக்கு சந்திரகாச்சி செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

