/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டாளியை ஜாமினில் எடுக்க வந்த மற்றொரு குற்றவாளி கைது
/
கூட்டாளியை ஜாமினில் எடுக்க வந்த மற்றொரு குற்றவாளி கைது
கூட்டாளியை ஜாமினில் எடுக்க வந்த மற்றொரு குற்றவாளி கைது
கூட்டாளியை ஜாமினில் எடுக்க வந்த மற்றொரு குற்றவாளி கைது
ADDED : நவ 20, 2025 03:39 AM
பெருங்களத்துார்: தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்தவர் மோகன். எல்.ஐ.சி., ஏஜன்ட். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், வீட்டை பூட்டிவிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்திற்கு சென்றார்.
திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், திருட்டில் ஈடுபட்டது, சேலையூரை அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்த சாம்ராஜ், 27, நங்கநல்லுாரை சேர்ந்த தணிகைவேல், 18, என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், சேலையூர் பகுதியில் நடந்த மற்றொரு திருட்டு வழக்கில், சாம்ராஜ் சிறையில் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் நண்பனை ஜாமினில் எடுப்பதற்காக, வழக்கறிஞரை சந்திக்க வந்த தணிகைவேலை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ஆதம்பாக்கத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளியே வந்தபோது, டாஸ்மாக் கடையில் சாம்ராஜ் பழக்கமாகியுள்ளார். பின், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி, பகல் நேரங்களில், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

