/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
16 வடிகால்வாய்களை புதுப்பிக்க ரூ.7.12 கோடி கமிஷனர் ஒப்புதலுக்கு காத்திருக்கும் அதிகாரிகள் ஆலந்துார் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

ADDED : நவ 20, 2025 03:40 AM
ஆலந்துாரில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், 16 வடிகால்வாய்களை, 7.12 கோடி ரூபாயில் புனரமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கமிஷனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆலந்துார் 160வது வார்டில், 65 தெருக்கள் உள்ளன. 19,000 மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும், இப்பகுதி மக்கள் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள இந்த வார்டில், பருவமழை காலத்தின் போது மழைநீரை வெளியேற்றும் வசதி இல்லை. இன்றளவிலும், நகராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் தான் உள்ளது.
கோரிக்கை அதில், மழைநீர் உள்வாங்கும் திறன் குறைவாக உள்ளது. மேலும், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக, வார்டு கவுன்சிலர் பிருந்தா, ஒவ்வொரு மண்டல குழு கூட்டத்திலும், மழைநீர் வடிகால்வாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து வந்தார்.
இதையடுத்து, மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், மாநகராட்சி, குடிநீர் வாரிய அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.
தீர்மானம் இதில், சித்தர் கோவில் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மடுவின்கரை தெருக்கள், மதுரகாளி தெரு, ஆபிரஹாம் தெரு உள்ளிட்ட, 16 தெருக்களில், பழைய வடிகால்வாய்களை அகற்றி, புதிதாக அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 7.12 கோடி ரூபாயில், புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சமீபத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், கமிஷனரின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆலந்துார் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மழைநீர் வடிகால்வாய்களை புதுப்பிக்க, மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, வார்டு பொது நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-- நமது நிருபர் -