/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.32 கோடி மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
/
ரூ.2.32 கோடி மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : ஜூலை 16, 2025 12:32 AM

ஆவடி, தனியார் நிறுவனத்திடம், 2.32 கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு ராடு, எம்.எஸ்.பைப் வாங்கி பணத்தை தராமல் ஏமாற்றிய வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மணலியில் உள்ள 'பி.எஸ்.எம்., எக்ஸ்போர்ட்ஸ்' ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல் உடையார், 39. இவருக்கு, கீழ்கட்டளையைச் சேர்ந்த சதீஷ், 48, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஜெகன், 48 மற்றும் நரசிம்மன், 45, ஆகியோருடன் தொழில் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டது.
மூவரும் வடிவேல் உடையாரை தொடர்பு கொண்டு, அவர் பணியாற்றும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, இரும்பு ராடு, எம்.எஸ்.பைப் உள்ளிட்டவற்றை விற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
ஆறு தனியார் நிறுவனங்களிடம், 'பர்சேஸ் ஆர்டர்' போட்டு, 2.32 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், வடிவேல் உடையாரிடம் கொடுக்காமல் ஏமாற்றினர்.
இது குறித்து, கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான தனிப்படை போலீசார், ஏற்கனவே சதீஷ், ஜெகன், நரசிம்மன் ஆகிய மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த குன்றத்துார், பாஸ்கரன் தெருவைச் சேர்ந்த அருண்குமார், 35, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.