/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை விவகாரம் மேலும் ஒருவர் சிக்கினார்
/
போதை மாத்திரை விவகாரம் மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : பிப் 16, 2024 12:32 AM
அண்ணா நகர், அண்ணா நகரில், கஞ்சா மற்றும் போதை மாத்திரை விவகாரத்தில், வட மாநிலத்தவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் சிக்கினார்.
அண்ணா நகர், சாந்தி காலனி பகுதியில் போலீசார், இரு நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, போதை மாத்திரை வைத்திருந்த மேற்கு வங்கம், டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த முகமது அமன், 23, என்பவர் சிக்கினார்.
சாந்தி காலனியில் அவர் வசித்த வீட்டில் இருந்து, 1,514 போதை மாத்திரைகள், 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வட மாநிலத்தவர்கள் ஏழு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த ராஜ்குமார் குல்தீப், 23, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.