/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
88 வயது முன்னாள் ராணுவ வீரரை சாலையில் முட்டி துாக்கி வீசிய பசு சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

ADDED : ஏப் 07, 2025 02:22 AM

அம்பத்துார்:அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, பிரித்திவிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 88; முன்னாள் ராணுவ வீரர். மகளுடன் வசித்து வருகிறார். இவர், தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
கடந்த 4ம் தேதி, காலை 6:50 மணிக்கு, வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு, பகுதிவாசிகள் வைத்த உணவை சாப்பிட்டு கொண்டிருந்த பசு, திடீரென முனுசாமியை முட்டி துாக்கி வீசியது.
இதில், தலைகுப்புற விழுந்த முனுசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் முனுசாமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சைக்கு பின், அன்று மாலை அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள், சமூக வலைதளத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவலறிந்த அம்பத்துார் மண்டல நல அதிகாரி பிரியதர்ஷினி, சுகாதாரத்துறை அலுவலர் கேசவன் மற்றும் அதிகாரிகள், முனுசாமியின் வீட்டிற்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பின், முனுசாமியை முட்டிய பசு உட்பட அப்பகுதியில் சுற்றித் திரிந்த நான்கு மாடுகளை பிடித்து, மாநகராட்சிக்கு சொந்தமான தொழுவத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர்.