/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்போலோ மருத்துவமனையில் நவீன முறை இதய சிகிச்சை சாதனை
/
அப்போலோ மருத்துவமனையில் நவீன முறை இதய சிகிச்சை சாதனை
அப்போலோ மருத்துவமனையில் நவீன முறை இதய சிகிச்சை சாதனை
அப்போலோ மருத்துவமனையில் நவீன முறை இதய சிகிச்சை சாதனை
ADDED : செப் 05, 2025 11:42 PM
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் நவீன முறையில் இதய சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது நோயாளிக்கு இதய சிகிச்சை தர வேண்டி இருந்தது. சில காரணங்களால் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சையால் அதிக ஆபத்து இருப்பதாக கருதப்பட்டது. இதையடுத்து நவீன ரெசிலியா தொழில்நுட்பத்தால் குறைந்தபட்ச ஊடுருவல் மூலம் சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த வால்வு நீண்ட காலம் நீடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சிகிச்சை பெறவேண்டிய சூழல் தடுக்கப்படுகிறது. கடுமையான பெருநாடி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை சிறப்பான தீர்வை தருகிறது.
மூத்த இதயநோய் நிபுணரும், ஸ்ட்ரக்ச்சுரல் இண்டர்வென்ஷன்ஸ் பிரிவின் தலைவருமான டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு தலைமையில் இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் ஜி. செங்கோட்டுவேலு கூறுகையில், “இந்த செயல்முறை இந்தியாவில் இதய சிகிச்சையில் புதிய அத்தியாயத்தை துவங்குகிறது. கால்சியம் படிதலை எதிர்க்கவும் நீடித்து உழைக்கும் தன்மையை ஏற்படுத்தவும் ரெசிலியா வால்வு அமைக்கப்பட்டுள்ளது. வால்வு சிகிச்சையில் சவால்கள் உள்ளவர்களுக்கு, தனித்துவமான ரெசலியா திசு தொழில்நுட்பம் வால்வு சிதைவை கணிசமாகக் குறைக்கிறது. விரைவாக குணம் அடைதல், சிக்கல்களின் அபாயங்களைக் குறைத்தலை இந்த சிகிச்சை வழங்குகிறது என்றார்.
குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் பிரீத்தாரெட்டி கூறுகையில், “ நீண்டகாலம் செயல்படும் ஆற்றலுடன், குறைந்தபட்ச ஊடுருவலுடன் இந்த சிகிச்சை நடந்துள்ளது. இத்தகைய உலகளாவிய கண்டுபிடிப்புகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதன் மூலம் தரமான சிகிச்சையை தருகிறோம். மிகவும் சிக்கலான இதய சிகிச்சைகளுக்கான நம்பகமான இடமாக அப்போலோ திகழ்வதை மீண்டும் நிரூபித்துள்ளோம்” என்றார்.