/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்பல்லோவின் 500வது மருத்துவமனை துவக்கம்
/
அப்பல்லோவின் 500வது மருத்துவமனை துவக்கம்
ADDED : அக் 08, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வேளச்சேரியில், அப்பல்லோவின் 500வது மருத்துவமனையை, அக்குழும நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி, நடிகை சாக் ஷி அகர்வால் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து, நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி கூறியதாவது:
உலகளவில், அப்பல்லோ மருத்துவ குழுமத்தின், 500வது மருத்துவமனை, வேளச்சேரியில் துவங்கப் பட்டுள்ளது. சென்னையில், 30வது மருத்துவ மனையாகும்.
இங்கு, மகளிர் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் மருத்துவம், மனநோயியல், எலும்பு சிகிச்சைகள், நுரையீரல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன், தடுப்பூசிகள், பல் மருத்துவ சேவை, முழு உடற்பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.