/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் குழந்தைக்கான விருதுக்கு விண்ணப்பம்
/
பெண் குழந்தைக்கான விருதுக்கு விண்ணப்பம்
ADDED : செப் 26, 2024 12:13 AM
சென்னை, சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கான சிறப்பாக பங்காற்றும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.
அந்த வகையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு உள்ளிட்ட செயல்புரிந்த பெண் குழந்தைகளுக்கு, ஜன.,24ல் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள பெண் குழந்தைகள், http://awards.tn.gov.in என்ற இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, அக்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.