ADDED : நவ 30, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சமூக நீதிக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில், 1995 முதல் தமிழக அரசால் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுவோருக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், 1 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
இவ்விருதாளரை, தமிழக முதல்வர் தேர்வு செய்வார். அதன்படி, 2024ம் ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுயவிபரம், சமூக நீதிக்கான பணிகள் அடங்கிய விண்ணப்பத்தை, சென்னை மாவட்ட கலெக்டருக்கு, டிச., 20ம் தேதிக்குள் அனுப்பலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.