தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஆவின் பாலகம்' நடத்த வரும் 10க்குள் விண்ணப்பம்

 'ஆவின் பாலகம்' நடத்த வரும் 10க்குள் விண்ணப்பம்

 'ஆவின் பாலகம்' நடத்த வரும் 10க்குள் விண்ணப்பம்


ADDED : ஜூன் 06, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் பெரம்பூர், தி.நகர், பாலவாக்கம், மயிலாப்பூர், அண்ணா நகர் உட்பட ஒன்பது இடங்களில், 'ஆவின் பாலகம்' நடத்த விருப்பமுள்ளோர், வரும், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, 'ஆவின்' நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, 'ஆவின்' நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் அல்லது சிறு வணிகர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, 'ஆவின்' பாலகங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தலாம்.

பெரம்பூர், கவியரசு கண்ணதாசன் நகர்; தி.நகர், கிரியப்பா சாலை; தி.நகர், லலிதாபுரம்; பாலவாக்கம், பல்லவன் குடியிருப்பு; மயிலாப்பூர் சி.ஐ.டி., காலனி; அண்ணா நகர், இமயம் காலனி; ஷெனாய் நகர், பாரதிபுரம்; கிண்டி சிட்கோ; வேளச்சேரி தொழிலாளர் காலனி; கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு, வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில், ஆவின் பாலகம் நடத்த விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர், பாதுகாப்பு வைப்புத்தொகையாக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 10ம் தேதிக்குள் கிடைக்கும்படி, நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ, பொது மேலாளர், சந்தைப்படுத்தல் பிரிவு, ஆவின், எண் 3- ஏ, பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை - 35 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விபரங்களுக்கு, https://aavin.tn.gov.in/ என்ற இணையதளம் மற்றும் 1800 425 3300 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us