தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 2ம் கட்ட திட்ட ' மெட்ரோ ' வில் 824 ' யு - கெர்டர் ' பொருத்தம்

 2ம் கட்ட திட்ட ' மெட்ரோ ' வில் 824 ' யு - கெர்டர் ' பொருத்தம்

 2ம் கட்ட திட்ட ' மெட்ரோ ' வில் 824 ' யு - கெர்டர் ' பொருத்தம்


ADDED : ஜூன் 06, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டம், மூன்று வழித்தடங்களில் 119 கி.மீ., துாரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், 80 மெட்ரோ ரயில் நிலையங்கள், மேம் பால பாதையில் அமைக்கப்பட உள்ளன .

மேம்பால பாதை களுக்குத் தேவையான, துாண்களை இணைக்கும் கான்கிரீட் கட்டுமான அமைப்பு எனும் 'யு - கெர்டர்'கள், நந்தம்பாக்கம் அருகே 43 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பிரத்யேக உற்பத்தி ஆலையில், பல்வேறு அளவுகளில் தயாரிக்கப்பட்டு வந்தன.

இரண்டாம் கட்ட திட்டத்திற்கு தேவையான மொத்தம் 824 யு - கெர்டர்கள் உற்பத்தி பணிகள் முழுதாக நிறைவடைந்தன.

இந்நிலையில், ஆதம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில், கடைசி யு - கெர்டரை பொருத்தும் பணி, நேற்று முன்தினம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும், மொத்தம் 824 யு - கெர்டர்களின் தயாரிப்பு மற்றும் நிறுவும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us