sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கொளத்துாரில் வண்ணமீன் விற்க கடைகள் வாடகைக்கு பெற விண்ணப்பம் வரவேற்பு

/

கொளத்துாரில் வண்ணமீன் விற்க கடைகள் வாடகைக்கு பெற விண்ணப்பம் வரவேற்பு

கொளத்துாரில் வண்ணமீன் விற்க கடைகள் வாடகைக்கு பெற விண்ணப்பம் வரவேற்பு

கொளத்துாரில் வண்ணமீன் விற்க கடைகள் வாடகைக்கு பெற விண்ணப்பம் வரவேற்பு


ADDED : அக் 01, 2025 03:04 PM

Google News

ADDED : அக் 01, 2025 03:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

கொளத்துார் வண்ணமீன் வர்த்தக மையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன்வளத்துறை சார்பில், கெளத்துாரில், மூன்று தளங்களுடன், வாகனம் நிறுத்துமிடம், உணவுக்கூடம் மற்றும் இதர வசதிகளுடன், வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், வண்ண மீன் மற்றும் துணை கருவிகள் விற்பனைக்காக, 215 முதல் 410 சதுர அடி வரையிலான, 185 கடைகள் உள்ளன.

இவற்றில், தரை தளத்தில் முன் வரிசையில் உள்ள கடைகளுக்கு, சதுர அடிக்கு 70 ரூபாயும், பின் வரிசை கடைகளுக்கு, 60 ரூபாயும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

முதல் தளத்தில், முன்வரிசை கடைகளுக்கு சதுர அடிக்கு 60 ரூபாய்; பின் வரிசைக்கு 50 ரூபாய்; இரண்டாம் தளத்தில், அனைத்து கடைகளுக்கும் 50 ரூபாய் என்ற அடிப்படையில், வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மூன்று ஆண்டுகளாக வண்ணமீன் வளர்ப்போர், உற்பத்தியாளர், வர்த்தகர் உள்ளிட்டோர் கடை ஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில், வண்ணமீன் கூட்டுறவு சங்க உறுப்பினர் அடையாள அட்டை போன்ற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கடை மட்டுமே ஒதுக்கப்படும். தகுதி வாய்ந்தோருக்கு குலுக்கல் முறையில், ஐந்து ஆண்டுகளுக்கு கடை ஒதுக்கப்படும்.

ஒதுக்கீடு ஆணை பெற்ற 15 நாட்களுக்குள், ஆறு மாத வாடகை தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் 5 சதவீத மாதாந்திர வாடகை அதிகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு, 044 - 2432 8596 என்ற தொலைபேசி எண் மற்றும் jdfchennai2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us