/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமை பொறியாளர்கள் 3 பேர் நியமனம்
/
தலைமை பொறியாளர்கள் 3 பேர் நியமனம்
ADDED : பிப் 19, 2025 12:25 AM
சென்னை,சென்னை மாநகராட்சியில் நிர்வாக வசதிக்காக, ஐந்து தலைமை பொறியாளர்கள் இடங்கள் இருந்தன. ஆட்சி மாற்றத்திற்கு பின், அந்த எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது.
இவற்றில், தலைமை பொறியாளராக இருந்த சக்தி மணிகண்டன் ஓய்வு பெற்று விட்டார். பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன், வரும், 25ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளர் கே.விஜயகுமார், பி.வி.பாபு ஆகியோர், தலைமை பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், பேரூராட்சி நிர்வாகத்தில், கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் வி.முருகேசன், தாம்பரம் மாநகராட்சியின் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.