/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில் தக்கார் நியமனம்
/
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில் தக்கார் நியமனம்
ADDED : ஜன 19, 2025 12:20 AM

சென்னை,ஹிந்து அறநிலையத் துறைக்குட்பட்ட, நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் புதிய தக்காராக, எம்.கோதண்டராமன் என்பவரை நியமித்து, அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜன., 13ல், அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவர், ''நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், தங்கத் தேர் செய்யப்பட்டு, விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்,'' என, கோதண்டராமன் கூறினார்.
கோதண்டராமன், புதுச்சேரிக்கு அருகே, மத்திய திருப்பதி எனும் விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேய கோவில் அறங்காவலராக இருந்துள்ளார்.
தவிர, செங்கல்பட்டு, கூவத்துார் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில், திருவாளீஸ்வரர் திரவுபதி அம்மன், இரு செல்வ விநாயகர் கோவில்கள் என, ஆறு கோவில் கும்பாபிஷேகங்களை நடத்தியுள்ளார்.

