/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாபிராம் பஸ் நிலையத்தில் நேர காப்பாளர் நியமனம்
/
பட்டாபிராம் பஸ் நிலையத்தில் நேர காப்பாளர் நியமனம்
ADDED : ஜூன் 20, 2025 12:09 AM
ஆவடி,பட்டாபிராமில் உள்ள பேருந்து நிலையம், ரயில்வே மேம்பால பணிக்காக, 2018ல் தற்காலிகமாக மூடப்பட்டது. மேம்பால பணி கடந்த ஆண்டு முடிந்ததை அடுத்து, பேருந்து நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது, கிண்டி, பூந்தமல்லி மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும், இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணியர் வசதிக்காகவும், பேருந்துகளை ஒருங்கிணைக்கவும் காலை, மாலை என, இரண்டு 'ஷிப்டு'களில் நேரக்காப்பாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதனால், மூன்று வழித்தட பேருந்துகளும் முறையாக இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஒரு வாரமாக, இரண்டாவது ஷிப்டில் பணிபுரியும் நேரக்காப்பாளர் இல்லாமல், அந்த அறை பூட்டப்பட்டு உள்ளது. இதனால், பட்டாபிராம் வரை வர வேண்டிய பேருந்துகள், ஆவடியுடன் நின்று விடுகின்றன.
பயணியர், பழையபடி ஆவடிக்கு சென்று, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, இம்மாதம் 17ம் தேதி, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் புதிதாக நேரக்காப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.