/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெலிவரி ஊழியரின் நேர்மைக்கு பாராட்டு
/
டெலிவரி ஊழியரின் நேர்மைக்கு பாராட்டு
ADDED : அக் 11, 2025 12:05 AM

திருவான்மியூர் :
சாலையில் கிடந்த பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த டெலிவரி ஊழியரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
பெசன்ட் நகர், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரதீப், 25; 'பிளிங்கிட்' எனும் 'ஆன்லைன்' டெலிவரி நிறுவனத்தில், டெலிவரி வேலை செய்து வருகிறார்.
டெலிவரி முடித்து, பெசன்ட்நகர், கலாஷேத்ரா காலனி, டைகர் வரதாசாரியார் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் பணக்கட்டு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த ஜெயபிரதீப், திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்டவர் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பணத்தை ஒப்படைத்த ஜெயபிரதீப்பின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.