/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோசடி வழக்கு விசாரிக்க வந்த மஹா., போலீஸ் எஸ்.ஐ., காயம்
/
மோசடி வழக்கு விசாரிக்க வந்த மஹா., போலீஸ் எஸ்.ஐ., காயம்
மோசடி வழக்கு விசாரிக்க வந்த மஹா., போலீஸ் எஸ்.ஐ., காயம்
மோசடி வழக்கு விசாரிக்க வந்த மஹா., போலீஸ் எஸ்.ஐ., காயம்
ADDED : அக் 11, 2025 12:05 AM
ஓட்டேரி: மஹாராஷ்டிராவில் 'டைல்ஸ்' வாங்கி விட்டு பணம் தராமல் இழுத்தடிப்பது குறித்த வழக்கை விசாரிக்க சென்னை வந்த, அம்மாநில எஸ்.ஐ.,க்கு, சம்பவ இடத்தில் இருந்தோருடன் ஏற்பட்ட கைகலப்பில் காயம் ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்த டைல்ஸ் வியாபாரியிடம், சென்னை நபர் டைல்ஸ் வாங்கியுள்ளார். ஆனால், பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து நாந்தேட் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த எஸ்.ஐ., சந்தோஷ் ரகுநாத், 50, தலைமையிலான போலீசார், சென்னை வந்தனர். பின், ஓட்டேரி, கோவிந்தன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டைல்ஸ் பொருட்களை, பறிமுதல் செய்யும் பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வழக்கறிஞர் தினேஷ், 36 மற்றும் மணிகண்டன், 22, ஆகியோருக்கும், எஸ்.ஐ., சந்தோஷ் ரகுநாத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த எஸ்.ஐ., சந்தோஷ் ரகுநாத்தின் இடது கை மீது, டைல்ஸ் பொருட்கள் விழுந்ததில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
உடன் வந்த போலீசார், அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது இடது கையில் நான்கு தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.