/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
-சென்னை வீராங்கனையர் மாநில ஜூடோவில் தங்கம்
/
-சென்னை வீராங்கனையர் மாநில ஜூடோவில் தங்கம்
ADDED : அக் 11, 2025 01:30 AM

சென்னை, சென்னையில் நடந்த மாநில அளவிலான ஜூடோ போட்டியில், சென்னையின் மோனிஷா மற்றும் ராமதிலகம், தங்கப் பதக்கம் வென்றனர்.
முதல்வர் கோப்பை, கல்லுாரி மாணவியருக்கான மாநில ஜூடோ போட்டி, சென்னை, பெரியமேடு நேரு அரங்கில் நடந்தது.
பல மாவட்ட வீராங்கனையர் பங்கேற்ற நிலையில், பெண்கள் 57 கிலோ பிரிவில் சென்னை சார்பாக போட்டியிட்ட ராமதிலகம், அதிக புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். கோவையின் காவியா வெள்ளி, சென்னையின் சோபனா வெண்கலம் வென்றனர்.
பெண்கள் 63 கிலோ பிரிவில், சென்னையின் மோனிஷா தங்கப் பதக்கம் வென்றார். கோவையின் கிஷாந்தினி வெள்ளி, மதுரையின் கேசவப்ரியா வெண்கலம் வென்றனர்.
மாநில வாலிபால் முதல்வர் கோப்பை, பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சியில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடந்தது.
இதன் இறுதி போட்டியில் சென்னை அணி, கோவை அணியை எதிர்த்து போட்டியிட்டது. அதில் அசத்திய சென்னை அணி, 25 - 21, 25 - 19, 22 - 25, 25 - 20 என்ற செட் புள்ளிகளில் கோவை அணியை வீழ்த்தியது. ஒட்டுமொத்த போட்டிகள் முடிவில், சென்னை அணி அதிக புள்ளிகள் பெற்று 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. தஞ்சாவூர், திருச்சி அணிகள், முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மாணவிக்கு வெள்ளி முதல்வர் கோப்பை, ஜிம்நாஸ்டிக் போட்டியில் சென்னை, ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் மாணவி கிரானா, பெண்களுக்கான 'பெலன்ஸ் பீம்' சுற்றில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பரிசு தொகையாக 75,000 ரூபாய் வழங்கப்பட்டது.
பளு துாக்குதல் பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்த முதல்வர் கோப்பைக்கான பளு துாக்குதல் போட்டியில், செங்கல்பட்டின் மகேந்திரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆண்கள் கல்லுாரி 60 கிலோ பிரிவில் செங்கல்பட்டு வீரர் மகேந்திரன் மொத்தம் 249 கிலோவை துாக்கி தங்கம் வென்றார். திருவள்ளூர் மாவட்டத்தின் அபிஷேக் மொத்தம் 243 கிலோ துாக்கி வெள்ளி; ராணிபேட்டை மாவட்டத்தின் சஞ்சை கண்ணன் 242 கிலோ துாக்கி வெண்கலம் வென்றுள்ளனர்.