/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரக்கோணம் - திருத்தணி 5 நாள் சிறப்பு ரயில் அறிவிப்பு
/
அரக்கோணம் - திருத்தணி 5 நாள் சிறப்பு ரயில் அறிவிப்பு
அரக்கோணம் - திருத்தணி 5 நாள் சிறப்பு ரயில் அறிவிப்பு
அரக்கோணம் - திருத்தணி 5 நாள் சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : ஆக 14, 2025 12:29 AM
சென்னை, ஆடி கிருத்திகையையொட்டி, அரக்கோணம் - திருத்தணி இடையே, இன்று முதல் 18ம் தேதி வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆடி கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். அவர்களின் வசதிகாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அரக்கோணத்தில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காலை 10:40 மணிக்கு திருத்தணி செல்லும். அங்கிருந்து காலை 10:50 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11:10 மணிக்கு அரக்கோணத்துக்கு வரும்.
அரக்கோணத்தில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம், 1:20 மணிக்கு திருத்தணி செல்லும். அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:48 மணிக்கு அரக்கோணம் வரும்
அரக்கோணத்தில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 3:10 மணிக்கு திருத்தணி செல்லும். அங்கிருந்து மாலை 3:20 மணிக்கு புறப்பட்டு மாலை 3:38 மணிக்கு அரக்கோணம் வரும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.