ADDED : ஜூன் 18, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'திருநங்கையருக்கான அரண்' என்ற தலைப்பில், சென்னை மற்றும் மதுரையில் இரண்டு தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.
சென்னை மாவட்டத்தில், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, அரண் இல்லங்களை செயல்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, இல்லம் அமைக்க விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துக்களை இம்மாதம் 24ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
இந்த தகவலை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.