/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆரணி ஆற்றின் நிரந்தர வெள்ள தடுப்பு பணி நீர்வளத்துறை இழுபறியால் வெள்ள அபாயம்
/
ஆரணி ஆற்றின் நிரந்தர வெள்ள தடுப்பு பணி நீர்வளத்துறை இழுபறியால் வெள்ள அபாயம்
ஆரணி ஆற்றின் நிரந்தர வெள்ள தடுப்பு பணி நீர்வளத்துறை இழுபறியால் வெள்ள அபாயம்
ஆரணி ஆற்றின் நிரந்தர வெள்ள தடுப்பு பணி நீர்வளத்துறை இழுபறியால் வெள்ள அபாயம்
ADDED : செப் 27, 2024 12:59 AM
சென்னை, ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான ஆரணியாறு, ஊத்துக்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வழியாக பயணித்து, பழவேற்காடு அருகே வங்க கடலில் கலக்கிறது.
கடந்தாண்டு 'மிக்ஜாம்' புயல், மழையில், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைகள் சேதம் அடைந்து, கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், அங்கு வசிப்போரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பொருள் சேதமும் ஏற்பட்டது.
எனவே, ஆரணியாற்றில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மூன்று கட்டங்களாக மேற்கொள்ள, நீர்வளத் துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, பாலுரெட்டி கண்டிகை, மேல்மாளிகைபட்டு, காவனுார், பெரியபாளையம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், அரியத்துறை ஆகிய இடங்களில் 1,670 மீட்டர் நிரந்தர வெள்ளத் தடுப்பு கான்கிரீட் சுவர், 8,300 மீட்டர் கரைகளை பலப்படுத்தும் பணிக்கு, 12.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பேரம்பேடு, ஏ.ரெட்டிபாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, அத்தமாஞ்சேரி ஆகிய இடங்களில், 635 மீட்டர் கான்கிரீட் கட்டுமானம், 2,850 மீட்டர் கரைகளை பலப்படுத்தும் பணிக்கு 10.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தத்தமஞ்சி, எர்ணாகுரசேரி, பிரளயம்பாக்கம், கடப்பாக்கம், வஞ்சிவாக்கம், ஆண்டார்மடம் ஆகிய இடங்களில் 794 மீட்டர் வெள்ள தடுப்பு சுவர், 1,900 மீட்டர் கரைகளை பலப்படுத்தும் பணிக்கு 14.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், பணிகள் இழுபறியாகவே நடந்து வருகிறது. இதனால், குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கினால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், ஆரணி கரையோர கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.