sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 படுமோசமான சாலையால் 'ஸ்விக்கி' ஊழியர் படுகாயம் :அதிகாரிகள் துாக்கம் கலைவரா?

/

 படுமோசமான சாலையால் 'ஸ்விக்கி' ஊழியர் படுகாயம் :அதிகாரிகள் துாக்கம் கலைவரா?

 படுமோசமான சாலையால் 'ஸ்விக்கி' ஊழியர் படுகாயம் :அதிகாரிகள் துாக்கம் கலைவரா?

 படுமோசமான சாலையால் 'ஸ்விக்கி' ஊழியர் படுகாயம் :அதிகாரிகள் துாக்கம் கலைவரா?


ADDED : ஜன 20, 2026 05:34 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பகுதியில் உள்ள, கருக்கு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பள்ளத்தில், சிக்கி, 'ஸ்விக்கி' ஊழியர் படுகாயமடைந்தார்.

அம்பத்துார் கருக்கு, மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், புதுார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், கொரட்டூர், பட்டரைவாக்கம் மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல, கருக்கு பிரதான சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள், கருக்கு ரயில்வே மேம்பாலத்தின் வழியாக பயணம் செய்கின்றன. இந்நிலையில், கருக்கு மேம்பாலத்தில், சாலை முழுதும் சேதமடைந்து, பல்லாங்குழிகளாக மாறியுள்ளது.

இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதாகவும் தொடர் புகார் எழுந்தபடி உள்ளது.

இந்நிலையில், கருக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு, பால் பாக்கெட் டெலிவரி செய்ய கொளத்துார், செந்தில் நகரைச் சேர்ந்த 'ஸ்விக்கி' ஊழியரான ராகவன், 43, 'ஹோண்டா ஷைன்' பைக்கில் நேற்று காலை சென்றார்.

அப்போது, சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்காமல் இருக்க வலது பக்கமாக வளைந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக, எதிர் திசையில் வந்த ஆட்டோ மீது ராகவனின் பைக் மோதியது. இதில், வலது கால் விரலில் எலும்பு முறிவு, கையில் படுகாயமும் ஏற்பட்டது.

சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து வழித்தடமான கருக்கு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை 'ஆன்லைன்' மூலம் புகார் அளித்தும் பலனில்லை என அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

உயிர்பலி அசம்பாவிதங்கள் நடந்தால் தான், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பரா என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2 மாதம் என்ன செய்வேன்?

'இந்த பள்ளம் இல்லை என்றால், அந்த பக்கம் சென்றிருக்க மாட்டேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு என் குடும்ப செலவுக்கு என்ன செய்வேன்' என, விபத்தில் சிக்கிய ராகவன் வேதனையுடன் பேசியது, அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.






      Dinamalar
      Follow us