/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : ஆக 14, 2025 12:43 AM

சைதாப்பேட்டை, சாலை ஆக்கிரமிப்பை அகற்றச்சென்ற அதிகாரிகளுடன் தகராறு செய்த ஆக்கிரமிப்பாளர்கள், அ.தி.மு.க.,வினரை வரவழைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடையாறு மண்டலம், 169வது வார்டு, சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனி கிழக்கு மாட வீதி, 40 அடி அகலம் கொண்டது. சாலையில், 10 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளன.
இவர்களுக்கு, அப்பாவு நகரில் மாற்று வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் இங்கிருந்து செல்லாமல் அடம்பிடித்து வந்தனர்.
நேற்று, அவர்கள் வசித்த வீடுகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று வீடு வழங்க, மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.
அதில், ஆறு குடும்பத்தினர் செல்ல தயாராக இருந்த நிலையில், நான்கு குடும்பத்தினர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க.,வினரை வரவழைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், நீதி மன்ற தடை உத்தரவு இருக்கிறதா என, அதிகாரிகள் கேட்டனர். அவர்கள், 'தடை உத்தரவு இல்லை; ஆனால், வழக்கு நிலுவை யில் உள்ளது' என, கூறினர்.
இதை அதிகாரிகள் ஏற்கவில்லை. போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி, 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.