/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் ரகளை 3 பேர் மீது பெண் புகார்
/
விமானத்தில் ரகளை 3 பேர் மீது பெண் புகார்
ADDED : ஆக 14, 2025 12:42 AM
சென்னை, விமானத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் மீது, பெண் பயணி புகார் அளித்துள்ளார்.
கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்ட 'இண்டிகோ' விமானம், இரவு 11:00 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.
விமானத்தில் 140 பயணியர் இருந்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த 35 வயது பெண் ஒருவரின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஆண் பயணியர் மூன்று பேர், சத்தமிட்டபடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை, பெண் பயணி தட்டிக் கேட்டதற்கு, அந்த மூன்று ஆண் பயணியர் தகராறு செய்ததாக கூறப்படுகிது.
இதை பார்த்து, 'எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள்' என கேட்ட பணிப்பெண்களையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலைய வருகை முனையத்தில் நுழைந்தவுடன், பெண் பயணி இது தொடர்பாக விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.