/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11 மாடி அலுவலக வளாகம் கட்டுது 'அரிஹந்த்' குழுமம்
/
11 மாடி அலுவலக வளாகம் கட்டுது 'அரிஹந்த்' குழுமம்
ADDED : ஜன 27, 2025 03:08 AM

சென்னை:சென்னை மட்டுமின்றி, நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை, அரிஹந்த் குழுமம் செயல்படுத்தி வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருகை அதிகரித்த நிலையில், அவற்றின் தேவை கருதி, சமீப காலமாக, அடுக்குமாடி அலுவலக வளாகங்கள் கட்டுவதிலும், இந்த குழுமம் களமிறங்கி உள்ளது. இந்த வகையில், பழைய மாமல்லபுரம் சாலை துரைபாக்கத்தில், 1.60 ஏக்கர் நிலத்தில், அரிஹந்த் குழுமம் சார்பில், தரைதளத்துடன், 11 மாடி அலுவலக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இங்கு, 3.71 லட்சம் சதுர அடி அலுவலக வளாகங்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும். ஒரே சமயத்தில், 4,000 பேர் பணி புரியும் அளவுக்கு அலுவலக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதனால், பழைய மாமல்லபுரம் சாலையில் கூடுதல் அலுவலகங்கள் வர வாய்ப்பு ஏற்படும் என, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

