/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆயுதப்படை போலீஸ்காரர் புதுப்பேட்டையில் மர்ம மரணம்
/
ஆயுதப்படை போலீஸ்காரர் புதுப்பேட்டையில் மர்ம மரணம்
ஆயுதப்படை போலீஸ்காரர் புதுப்பேட்டையில் மர்ம மரணம்
ஆயுதப்படை போலீஸ்காரர் புதுப்பேட்டையில் மர்ம மரணம்
ADDED : பிப் 27, 2026 05:34 AM
சென்னை: ஆயுதப்படை போலீஸ்காரர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 28. இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில், காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், சமீபத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற உள்ள உடற்பயிற்சி தேர்விற்காக, மருத்துவ விடுப்பு எடுத்து தயார் செய்து வந்தார்.
நேற்று காலை, வெகுநேரமாகியும் சுப்பிரமணி எழவில்லை. துாங்கிக் கொண்டிருக்கிறார் என நினைத்த அவரது நண்பர்கள், வேலைக்கு சென்றுவிட்டனர்.
பணி முடிந்து வந்து பார்த்தபோது, மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே, இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

