ADDED : அக் 10, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, ரவுடிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, புளியந்தோப்பு அம்மையம்மாள் தெருவில், நேற்று காலை புளியந்தோப்பு தனிப்படை போலீசார், திடீரென அங்கு சென்றனர்.
அங்கு, பழைய குற்றவாளிகளான தொட்டி மணி, 24; ரஞ்சித், 20; அஜய் என்ற ஷியாம், 18 ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதில். தொட்டி மணி மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து, ஒன்றரை அடி நீள இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.