/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ரயில் நிலையங்களில் ஏற்பாடு
/
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ரயில் நிலையங்களில் ஏற்பாடு
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ரயில் நிலையங்களில் ஏற்பாடு
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ரயில் நிலையங்களில் ஏற்பாடு
ADDED : ஏப் 22, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி 80,000 - 1,00,000 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. பயணியர் வசதிக்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும், எலக்ட்ரிக் பைக் மற்றும் கார்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி அமைக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு வாரங்களில் பணிகள் முழுதும் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.