/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கம் குடியிருப்பில் ரூ.52 கோடி நிலுவை வரி வசூலிப்பாளர் நியமித்தும் வசூலில் பின்னடைவு
/
பெரும்பாக்கம் குடியிருப்பில் ரூ.52 கோடி நிலுவை வரி வசூலிப்பாளர் நியமித்தும் வசூலில் பின்னடைவு
பெரும்பாக்கம் குடியிருப்பில் ரூ.52 கோடி நிலுவை வரி வசூலிப்பாளர் நியமித்தும் வசூலில் பின்னடைவு
பெரும்பாக்கம் குடியிருப்பில் ரூ.52 கோடி நிலுவை வரி வசூலிப்பாளர் நியமித்தும் வசூலில் பின்னடைவு
ADDED : மார் 05, 2024 12:36 AM
சென்னை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில், 28,000 வீடுகள் உள்ளன. இதில், லிப்ட் வசதி இல்லாத செம்மஞ்சேரியில் உள்ள 6,764 வீடுகளுக்கு, மாதம் 250 ரூபாய் வீதம் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மீதமுள்ள, 21,236 வீடுகள் பெரும்பாக்கத்தில் உள்ளன. இங்கு, லிப்ட் வசதி உள்ளதால், மாதம் 750 ரூபாய் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோக, திட்டத்தை பொறுத்து தவணை தொகையும் வசூலிக்கப்படும்.
மொத்தமுள்ள, 171 பிளாக்குகளில், 168 பிளாக்கில் நலச்சங்கம் துவங்கப்பட்டு உள்ளது. இதில், 54 பிளாக்குகள், 'நம் குடியிருப்பு, நம் பொறுப்பு' என்ற திட்டத்தில், பராமரிப்பு கட்டணம் வசூலித்து செயல்பட்டு வருகிறது.
மீதமுள்ள, 117 பிளாக்குகளை சேர்ந்தோர், வாரிய எஸ்டேட் அலுவலகத்தில் பராமரிப்பு கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக, 12,000த்துக்கும் மேற்பட்டோர் பராமரிப்பு கட்டணம் மற்றும் தவணை தொகை செலுத்தாமல் உள்ளனர்.
இந்த வகையில், செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில், 52 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்து உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறையால், வசூலில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன், நிலுவை தொகை மற்றும் நடப்பு பராமரிப்பு கட்டணம், தவணை தொகையை வசூலிக்க 10 வரி வசூலிப்பாளர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், இவர்கள் எஸ்டேட் மற்றும் வாரிய அலுவலகத்தில் இதர பணிகள் செய்வதால், நிலுவை தொகையை வசூலிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இது குறித்து, வாரிய எஸ்டேட் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
நிலுவை தொகையை வசூலிக்க சென்றால், கட்சியின் அடையாளத்தை பயன்படுத்தி மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளனர். மேல் அதிகாரிகளிடம் கூறினால், அதுபோன்ற வீடுகளை விட்டுவிட்டு, இதர வீடுகளில் வசூல் செய்யும்படி கூறுகின்றனர்.
அதிகாரிகளே இப்படி கூறினால், நிலுவை தொகை எப்படி வசூலிக்க முடியும். அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், எங்களை அலுவலக பணியில் ஈடுபடுத்துவதால், வசூலில் தீவிரம் காட்ட முடியவில்லை.
இந்த நிதியில் தான், கட்டடங்கள் பராமரிப்பு நடக்கின்றன. எஸ்டேட், வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் தான், நிலுவை தொகை முழுவதும் வசூலிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

