/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அசோக் நகர் சாலையில் கழிவுநீர் பல மாதமாக வழிந்தோடுவதால் அவதி
/
அசோக் நகர் சாலையில் கழிவுநீர் பல மாதமாக வழிந்தோடுவதால் அவதி
அசோக் நகர் சாலையில் கழிவுநீர் பல மாதமாக வழிந்தோடுவதால் அவதி
அசோக் நகர் சாலையில் கழிவுநீர் பல மாதமாக வழிந்தோடுவதால் அவதி
ADDED : நவ 18, 2024 02:33 AM

அசோக் நகர்:அசோக் நகர், இரண்டாவது அவென்யூ சாலையில், பல மாதங்களாக பாதாள சாக்கடை இயந்திர நுழைவு வழியிலிருந்து கொப்பளித்து, கழிவுநீர் சாலையில் தேங்கி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகர் 135வது வார்டில், அசோக் நகர் இரண்டாவது அவென்யூ சாலை உள்ளது. இச்சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது.
இது மேற்கு மாம்பலம் மற்றும் கே.கே., நகர் 100 அடி சாலை ஆகியவற்றை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது.
இச்சாலையில், உள்ள பாதாள சாக்கடை, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதனால், பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இதன் விளைவாக, பல மாதங்களாக பாதாள சாக்கடை மேல் மூடியில் இருந்து கழிவுநீர் கொப்பளித்து, சாலையில் ஆறாக பாய்ந்து வருகிறது. அந்த கழிவு நீர் அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் கலந்து வருகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் பட்டு அவதிப்படுகின்றனர்.
தொடர்மழை பெய்தால், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுமோ என, அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.