/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஏசியான்' திரைப்பட விழா இன்று துவக்கம்
/
'ஏசியான்' திரைப்பட விழா இன்று துவக்கம்
ADDED : அக் 16, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் உள்ள மலேசிய துணை துாதரகத்தின் சார்பில், 'ஏசியான்' திரைப்பட விழா இன்று துவங்கி, மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.
மலேசிய துணை துாதரகம், இந்திய சுற்றுலா துறை மற்றும் ஆவிச்சி கலை, அறிவியல் கல்லுாரி ஆகியவற்றின் சார்பில், 'ஏசியான்' சுற்றுலா மற்றும் திரைப்பட விழா இன்று முதல் நாளை மறுநாள் வரை, விருகம்பாக்கத்தில் உள்ள ஆவிச்சி கல்லுாரியில் நடத்தப்படுகிறது.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கலா சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.