/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிக்கெட் பரிசோதகர்களை கடித்த அசாம் வாலிபர் கைது
/
டிக்கெட் பரிசோதகர்களை கடித்த அசாம் வாலிபர் கைது
ADDED : நவ 26, 2025 03:14 AM

சென்னை: டிக்கெட் எடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், டி.டி.இ., எனும் டிக்கெட் பரிசோதகர்களை தாக்கி, கடித்த அசாம் வாலிபரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடை ஒன்றில், சாரதா, 39, மலையரசன், 31, சீனிவாசன், 31, ஆகிய டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று முன்தினம் மாலையில், பயணியரிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், வட மாநில வாலிபரிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது, அவரிடம் டிக்கெட் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அந்த வாலிபரும் ஆண் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதில், இருவரை அந்த இளைஞர் தாக்கி, கடித்து காயப்படுத்தினார். தடுக்க வந்த பெண் டிக்கெட் பரிசோதகரை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து, அந்த நபரை பிடித்து, பெரம்பூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான், 27, என்பதும், வேலை தேடி சென்னை வந்ததும் தெரிய வந்தது. போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் ரயில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கம் சார்பில், எழும்பூர், பெரம்பூர், கடற்கரை, தாம்பரம் உட்பட பல்வேறு இடங்களில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

