/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹெராயின் வைத்திருந்த அஸ்ஸாம் வாலிபர் கைது
/
ஹெராயின் வைத்திருந்த அஸ்ஸாம் வாலிபர் கைது
ADDED : ஏப் 08, 2025 11:46 PM

மீனம்பாக்கம், மீனம்பாக்கம், அம்மா உணவகம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரை கண்டதும் வடமாநில நபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் 9.5 கிராம் ஹெராயின் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் அஸ்ஸாம் மாநிலம், மரிக்கோன் மாவட்டம், மொய்ராபூரை சேர்ந்த நஜிமுதின், 24, என்பது தெரிந்தது.
புதுப்பேட்டையில் தங்கி, பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும், அவ்வப்போது அஸ்ஸாம் சென்று, ஹெராயின் போதைப் பொருள் வாங்கி வந்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, மீனம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.