/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட அளவில் கோ - கோ விருகம்பாக்கம் ஆவிச்சி முதலிடம்
/
மாவட்ட அளவில் கோ - கோ விருகம்பாக்கம் ஆவிச்சி முதலிடம்
மாவட்ட அளவில் கோ - கோ விருகம்பாக்கம் ஆவிச்சி முதலிடம்
மாவட்ட அளவில் கோ - கோ விருகம்பாக்கம் ஆவிச்சி முதலிடம்
ADDED : அக் 30, 2024 12:11 AM

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித் துறையின், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
இதில், தென் சென்னை வருவாய் மாவட்டத்தின் கோ - கோ போட்டி, ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மூன்று பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக நடந்தன.
நேற்று முன்தினம் மாணவர்களுக்காக போட்டி மட்டும் நடந்தது. அதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா, 10 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் 14 வயது பிரிவில் விருகம்பாக்கம் ஆவிச்சி அணி, 15 - 4 என்ற கணக்கில் ராயப்பேட்டை ஆர்.கே.எம்., பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், 17 வயதில், விரும்பாக்கம் ஆவிச்சி பள்ளி, 18 - 2 என்ற கணக்கில் அடையாறு வித்யா ரத்னா பள்ளியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது.
தொடர்ந்து, 19 வயதில் விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, 12 - 4 என்ற கணக்கில் சோழிங்கநல்லுார் பெனியல் மெட்ரிக் பள்ளியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று, அதே இடத்தில் துவங்கிய மாணவியருக்கான கோ - கோ போட்டியில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதேபோல், முகப்பேர் வேலம்மாள் பள்ளியில், வடசென்னை மாவட்ட அளவிலான கோ - கோ போட்டிகள் நடக்கின்றன.