ADDED : டிச 08, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி, பொன்னேரி, திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், ெஹச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர், 2,000 ரூபாய் பெற பட்டனை அழுத்தி காத்திருந்தார்.
அதில், கூடுதலாக, 2,000 ரூபாய் வந்தது. இது குறித்து வங்கி நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த மையத்தின் கதவு பூட்டப்பட்டது.