/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநங்கையருடன் தகராறு தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
/
திருநங்கையருடன் தகராறு தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
திருநங்கையருடன் தகராறு தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
திருநங்கையருடன் தகராறு தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : ஏப் 30, 2025 12:28 AM
தரமணி, திருவான்மியூர், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன், 23.
நேற்று முன்தினம் இரவு, இந்திராநகர் ரயில் நிலையம் அருகில் நின்ற திருநங்கைகளிடம், மூன்று பேர் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அந்த வழியாக சென்ற பாண்டியராஜன் மற்றும் அவருடன் சென்ற நண்பர் தட்டி கேட்டுள்ளார்.
வாக்குவாதம் ஏற்பட்டு மூன்று பேரும் சேர்ந்து, பாண்டியராஜனை தாக்கினார். தப்பி ஓடிய அவரை தர்மாம்பாள் பாலிடெக்னிக் சாலை வரை துரத்தி சென்று தாக்கினர்.
தலை, கை, கழுத்து பகுதியில் பலத்த காயத்துடன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தரமணி போலீசார் விசாரணையில், பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த பாலகுரு, 25, ஹரிகிருஷ்ணன், 22, மற்றும் கல்லுாரி மாணவர் பாரத்குரு, 19 ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.
மூன்று பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.