ADDED : மார் 04, 2024 01:50 AM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி:வியாசர்பாடி, சஞ்சய் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் வேலு, 35. இவரது வீட்டிற்கு சென்ற வடமாநில வாலிபர் ஒருவர், 9 வயது இளைய மகன் தமிழை, கையை காட்டி கூப்பிட்டுள்ளார்.
தமிழ் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். மொழி புரியாத காரணத்தால், குழந்தையை கடத்த வந்ததாக நினைத்து, அவரை சரமாரியாக தாக்கினர்.
எம்.கே.பி.நகர் போலீசார் வாலிபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ள அந்த நபரிடம் விசாரிக்கின்றனர்.
