/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு சங்க நிர்வாகி மீது தாக்கு
/
குடியிருப்பு சங்க நிர்வாகி மீது தாக்கு
ADDED : மே 19, 2025 01:18 AM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, வழுதலம்பேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சதன்குமார் ராய், 44; குடியிருப்பு சங்க செயலர்.
சங்கத்தின் முன்னாள் செயலர் சத்தியமூர்த்தி, 46, சங்க தேர்தலில் தோல்வி அடைந்ததால், சதன்குமார்ராயுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் இரு மகன்களுடன் சங்க அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற சத்தியமூர்த்தி, சதன்குமார் ராயை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், பலத்த காயம் அடைந்த சதன்குமார் ராயை அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சத்தியமூர்த்தி, இரு மகன்களை தேடி வருகின்றனர்.