/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரிக்க முயற்சி
/
காதலிக்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரிக்க முயற்சி
ADDED : ஜன 04, 2025 12:31 AM

யானைகவுனி, சென்னை, யானைகவுனியை சேர்ந்தவர், 19 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜூன், 20, என்பவரை காதலித்து வந்தார்.
பின், அர்ஜூன் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரை விட்டு விலகினார். ஆனால், பெண்ணை அடிக்கடி பின்தொடர்ந்து சென்ற அர்ஜூன், அவரை காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்தார்.
நேற்று முன்தினம் அப்பெண் வால்டாக்ஸ் ரோடு, கல்யாணபுரம், பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, பைக்கில் நண்பர் ஜேம்சுடன் வந்த அர்ஜூன், காதலிக்கும்படி வற்புறுத்தி, தகராறு செய்தார்.
அந்த பெண் ஆத்திரம் அடைந்ததால், அர்ஜூன் வாட்டர்கேனில் எடுத்த வந்த பெட்ரோலை, அப்பெண் மீது ஊற்றி, தீ வைத்து கொளுத்த முயன்றார். பெண் சத்தம் போட்டதால், ஜேம்ஸ் உடன் பைக்கில் ஏறி தப்பினார்.
இதுகுறித்து, யானைகவுனி போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, யானைகவுனி, உட்வார்ப் பகுதியை சேர்ந்த அர்ஜூன், 20; ஜேம்ஸ், 20, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

