/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.41 லட்சத்திற்கு வாகனங்கள் ஏலம்
/
ரூ.41 லட்சத்திற்கு வாகனங்கள் ஏலம்
ADDED : அக் 04, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காவல் துறையில், கழிவு செய்யப்பட்ட, 192 இருசக்கர வாகனங்கள், 109 நான்கு சக்கர வாகனங்கள், அக்., 3ம் தேதி பகிரங்க ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான முன்பதிவு, செப்., 30ம் தேதி ராஜரத்தினம் மைதானத்தில், காலை 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடந்தது.
ராஜரத்தினம் மைதானத்தில், போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பகிரங்க ஏலம் நேற்று நடந்தது. இதில், 86 இருசக்கர வாகனங்கள், 67 நான்கு சக்கர வாகனங்கள், 41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.